sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மார் 25, 2015 10:50 AM

Google News

ADDED : மார் 25, 2015 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அர்ச்சகர் தரும் மலர் மாலையை வாகனங்களுக்கு அணிவிக்கலாமா?

கே.கைலாசம், குன்னூர்

சுவாமிக்கு சாத்தப்பட்ட மாலை மகாபிரசாதம். அதை வாகனங்களுக்கு அணிவித்தால், வழிஎல்லாம் பூக்கள் சிதறி, மற்றவர் காலில் மிதி படும். இதனால், பாவத்திற்கு ஆளாக நேரிடும். மாலையை வீட்டில் ஒருநாள் வைத்திருந்த பின், கால் மிதிபடாத இடத்தில் போடுங்கள்.

* உயிர் எங்கிருக்கிறது. இதயத்திலா அல்லது மூளையிலா?

பி.ரகுநாதன், புதுச்சேரி

இரண்டு இடத்திலும் இல்லை. தொப்புள் பிரதேசத்தின் உள்ளே 'வஸ்தி' என்ற பகுதி உள்ளது. சிலந்தி வலை போன்ற இங்கு, ஒளி வடிவில் உயிர் சுற்றிக் கொண்டிருக்கிறது.உடல் இயங்க இதயம் ரத்த ஓட்டமும், மூளை சிந்திக்கும் ஆற்றலையும் அளிக்கின்றன.

* பிள்ளையார் எறும்பு என்று ஒரு வகை இருக்கிறதே! அதற்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன?

ஏ.மருதை, பள்ளிக்கரணை

விநாயகர் யானையின் கருப்பு நிறம் கொண்டவர். கருணைக்கடலாக இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறார். கருப்பு நிறமுள்ள பிள்ளையார் எறும்பும் யாரையும் கடிப்பதில்லை. அதனால் அப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.

* காகத்திற்கு அன்னம் வைத்தால் போதுமா அல்லது அது சாப்பிட்ட பின்னர் தான் நாம் சாப்பிட வேண்டுமா?

ஆர். கிருஷ்ண மூர்த்தி, மைலாப்பூர்

'கூரை மேலே சோறு வைச்சா கோடி காக்கா' என்று சுலவடை உண்டு. முன்னோர் அம்சமான காகம், உணவு எடுத்த பின்னர்

சாப்பிட்டால். அவர்களின் ஆசி கிடைக்கும்.

* திருமணச் சடங்கில் மாலை மாற்றுவது எதற்காக?

ம.வாசுதேவன், ஒண்டிப்புதூர்

எனக்கு நீ.. உனக்கு நான்..என் இதயம் உன்னிடம்...உன் இதயம் என்னிடம்...நாம் ஒற்றுமையாக இருப்போம் என்ற தாத்பர்யம் தான் அது.

* * அடி பிரதட்சிணம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஆர்.ஜெயபாரதி, சாத்தூர்

அடி மேல் அடியாக, அடுத்தடுத்து இடைவெளியின்றி கால் வைப்பது அடிப் பிரதட்சிணம். இந்த நேர்ச்சையை செய்பவர்கள், நெய்க்குடம் சுமப்பவன் போல மெதுவாகச் சுற்ற வேண்டும் என்கிறது ஆகமம். நீண்ட நேரம் பொறுமையாகச் சுற்றுவதால், மனம் ஒருமுகப்படுகிறது. செயலில் வெற்றி பெறும் விதத்தில் மனபலம், தெய்வ அருள் உண்டாகிறது.

* பழநிக்கு எடுத்துச் சென்று பூஜிக்கும் வேல் காவடி எங்கள் வீட்டில் இருக்கிறது. அதை கோயிலில் தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களே! ஏன்?

வி.கே.ராமசாமி, வடக்கிபாளையம்

வீட்டு பூஜையறையில் வேல் காவடியைத் தாராளமாக வைக்கலாம். ஆனால், மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். தீட்டு காலத்தில் அந்த அறைக்குச் செல்வதை தவிருங்கள். இப்படி முறைப்படி செய்ய இயலாவிட்டால், காவடியைக் கோயிலில் வைப்பதே நல்லது.






      Dinamalar
      Follow us