sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்கள் சொல்கிறேன்!

/

கேளுங்கள் சொல்கிறேன்!

கேளுங்கள் சொல்கிறேன்!

கேளுங்கள் சொல்கிறேன்!


ADDED : மார் 31, 2015 11:39 AM

Google News

ADDED : மார் 31, 2015 11:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனுக்கு முடிக்காணிக்கை செலுத்தலாமா?

வ.மீனாட்சிசுந்தரம், உலகம்பட்டி

செலுத்தலாம்.திருவண்ணாமலை அண்ணாமலையார், சதுரகிரி மகாலிங்க சுவாமி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில் போன்ற ஒரு சில கோயில்களில் முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் இருக்கிறது.

**செவ்வாயில் பொருள் வாங்கினால் செல்வம் பொங்கும் என்பது உண்மையா?

எம்.எஸ்.சேகர், கோவை

நவக்கிரகங்களில் மங்களன் எனப்படுபவர் செவ்வாய். நவக்கிரகங்களில் நிலம், வீடு வாங்குவதற்கான பூமி யோகத்தை அருள்பவர் இவரே. வீடு மட்டுமில்லாமல் வீட்டுப் பொருட்களையும் மங்கள வாரமான செவ்வாயில் வாங்கினால் இல்லத்தில் செழிப்பு பொங்கவே செய்யும்.

* உலகமே வாழ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அமையும்?

கு.கோப்பெருந்தேவி, சென்னை

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிய கணியன் பூங்குன்றனார் உலகத்தையே தன் உறவினராக கருதிப் பாடியுள்ளார். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்க விரும்புகிறார் திருமூலர். நல்ல மனம் கொண்ட அனைவரும், உலக நலனுக்காகவே வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பர்.

சண்டிகேஸ்வரரை வணங்குவது எதற்காக?

அ. ஆரிமுத்து, சிவகங்கை

சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டுக்குரிய பலனைக் கொடுக்கும் அதிகாரம் கொண்ட இவரிடம், வேண்டுவது அவசியம். பக்தன் வணங்கினாலே கண் விழிக்கும் இவர் வழிபாட்டுக்கான பலனை வழங்குவார்.

60ம் கல்யாணம் நடத்தாமல் விட்டுப் போனவர்கள் அதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம்?

அ.கல்யாண ராமன், கள்ளக்குறிச்சி

பரிகாரமாக ஆயுள் ஹோமம் செய்யலாம். வயது தடையில்லை. இதனால் ஆரோக்கியம் மேம்படும். தம்பதியாக இல்லாதவர்கள் கூட, கணவர் அல்லது மனைவி மட்டும் கூடஇந்த ஹோமம் நடத்தலாம்.

* கர்ப்பிணி பெண்கள் எதைச் செய்தால் குழந்தைக்கு நன்மை உண்டாகும்?

யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்

கர்ப்ப காலத்தில் நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சத்துள்ள உணவு உண்பது, நல்ல நூல் படிப்பது ஆகியவை தாய்,சேய் இருவருக்கும் நன்மையளிக்கும். பிரகலாதனின் தாய் கர்ப்பிணியாக இருந்த போது, நாரதர் மூலம் நாராயண மந்திரத்தைக்

கேட்டதால், அவன் ஹரி பக்தனாக விளங்கியதைப் பாகவதம் கூறுகிறது. கர்ப்பிணிகள் 'டிவி' பார்க்கவே கூடாது. ஆன்மிகச் சொற்பொழிவு கேட்க வேண்டும். வீட்டில் பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்யலாம்.






      Dinamalar
      Follow us