sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூன் 02, 2015 10:26 AM

Google News

ADDED : ஜூன் 02, 2015 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அய்யனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா?

எல்.மகாதேவன், பச்சாபாளையம்

'அய்யன்' என்ற சொல்லுக்கு 'முதல்வர்' என்று பொருள். வருந்தி வந்து வணங்குவோருக்கு அருள் தருவதில் முதல்வர் ஐயப்பன். ஐயப்பன், அய்யனார் கோவில்கள் மலை, காடுகளில் உள்ளன. இங்கும் கஷ்டப்பட்டு சென்று இறைவனைத் தேடுகிறார்களே... அந்த இயல்பை ஐயப்பன் விரும்புகிறார். கிராமத்து ஜனங்கள் ஐயப்பனை, அய்யனாராக குதிரை வாகனம் உடையவராக வணங்குகிறார்கள். இன்னும் சிலர் 'சாஸ்தா' என்கிறார்கள். 'சாத்து' என்றால் 'கூட்டமாக வந்து வணங்குதல்' என்று பொருள். ஐயப்பன், அய்யனார் கோவில்களை கூட்டமாகச் சென்று வணங்குவதே இன்றுவரை வழக்கில் உள்ளது.

** பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போடலாமா?

ஏ.மருதை, பள்ளிக்கரணை

பெண்கள் இருக்கும் வீட்டிலும் செய்தால் தான் என்ன... இந்த வேலையில் மட்டுமல்ல! அவர்களுக்கு வீட்டு வேலையில் எந்த உதவியை வேண்டுமானாலும் செய்யலாம்.

* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?

எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

பெரிய கோவில்களில் பத்துநாள் பிரம்மோற்சவம் முடியும் நாளில், சுவாமியை ஆசுவாசப்படுத்த தீர்த்தவாரி நடத்துவதுண்டு. அதுபோல, கிராமக்கோவில் தெய்வங்களுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்வார்கள். காலப்போக்கில், இது முறைப்பெண்-முறை மாப்பிள்ளை விளையாட்டாகி விட்டது.

* பழக்கம் காரணமாக தீட்டுக்காலத்திலும் மந்திரம் சொல்லி வருகிறேன். இது சரியானதா?

கே.ஜி.சரவணன், சோளிங்கர்

தினமும் மந்திரம் சொல்பவர்களுக்கு தூங்கும் நேரத்திலும் கூட மந்திர ஒலி கேட்பது போன்ற உணர்வு இருக்கும். தவறு ஏதும் இல்லை.

* குலதெய்வம் உள்ள இடத்தில் இருந்து பிடிமண் கொண்டு வந்து, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுகிறார்கள். இதனால் பலன் கிடைக்குமா?

கோ.சீனிவாசன், கழனிவாசல்

மிக தூரத்தில் கோவில்கள் இருந்தால் மட்டும் இப்படி செய்யலாம். அருகிலேயே இருந்தால் தேவை இல்லை.



* பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

கே.மகேஸ்வரி, மதுரை

உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது. இவற்றை சமாளித்து வெற்றி கொள்வது தான் பரமபத விளையாட்டின் தத்துவம்.

தீபம் ஏற்றிய பிறகு வீடு பெருக்கலாமா?

ஜெயலட்சுமி, பெங்களூரு

கூடாது. விளக்கேற்றி விட்டால் மகாலட்சுமி நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அந்நேரத்தில் துடைப்பத்தை தொடக்கூடாது என்பது ஐதீகம்.






      Dinamalar
      Follow us