தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறேன்!

கேளுங்க சொல்கிறேன்!

கேளுங்க சொல்கிறேன்!


ADDED : ஜன 06, 2017 09:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2017 09:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* யாகம் நடத்தும்போது 'ஸ்வாஹா' என்று சொல்வதன் பொருள் என்ன?

ஏ.இளமதி, கடலூர்.

யாகம் என்பது அக்னியில் செய்யப்படுவது. 'அக்னிம் தூதம் வ்ருணீமஹே' என்கிறது வேதம். நாம் எந்த தெய்வத்திற்காக யாகத்தில் திரவியங்களைப் போடுகிறோமோ, அவற்றை அந்த தெய்வத்திடம் சேர்ப்பிக்க வேண்டியவர் அக்னி தேவன். அதாவது தெய்வ தூதர். இதனைச் செய்ய ஸ்வாஹா, ஸ்வதா என்ற சக்திகளை உடன் வைத்திருப்பார். அக்னியில் இடப்படும் திரவியங்களை ஹவிர்பாகமாக செய்து ஸ்வாஹா எனும் சக்தி மூலம் தேவர்களுக்கு அனுப்புவார். இதையே பித்ருக்களுக்காக செய்தால், ஸ்வதா என்னும் சக்தி மூலம் முன்னோர்களுக்கு சேர்ப்பார்.

தேவர்களுக்கு அக்னிமூலம் கொடுப்பது ஹவிஸ் என்று பெயர். இதை எடுத்துச் சென்று சேர்ப்பவர் ஸ்வாஹா.

பித்ருக்களுக்கு அக்னியில் இடப்படுவது கவிஸ். இதை எடுத்துச் சென்று சேர்ப்பவர் ஸ்வதா.

எனவேதான் 'ஸ்வாஹா' அல்லது 'ஸ்வதா' என்று யாகத்தில் சொல்வார்கள்.

விநாயகருக்கு வீட்டில் தினமும் எருக்கு மாலை சாத்தி வழிபடலாமா?

பி.ஜெகந்நாதன் ரெட்டியார்சத்திரம்.

தாராளமாக செய்யலாம். இதுபோல் செய்தால் எல்லா தடைகளும் இடையூறுகளும் நீங்கும். அருகம்புல்லும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஹோமத்தில் சிலர் சமித்தாக சவுக்கு மர சுள்ளிகளைப் பயன்படுத்துகிறார்களே...இது சரியா?

எஸ்.டி.ஸ்ரீநிவாசன் சேலையூர்.

பால்மரங்கள் எனப்படும் மா, பலா, அரசு, பொரசு, வன்னி இவற்றின் சுள்ளிகளையே சமித்தாக பயன்படுத்த வேண்டும். சவுக்கு மற்றும் கள்ளிமர சட்டங்களையெல்லாம் பயன்படுத்துவது தவறு.

* இரண்டாவது முறை கருவுற்ற பெண்ணுக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமா?

அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்.

தேவையில்லை. தலைபிரசவத்திற்குத் தான் வளைகாப்பு செய்ய வேண்டும்.

** உடல் நலமில்லாத நேரத்தில் நீராடாமல் பூஜை செய்யலாமா?

என்.லலிதா சென்னை.

கூடுமானவரை கண்டஸ்நானம் எனப்படும் கழுத்தோடு குளிப்பதையாவது செய்து பூஜை செய்வது நலம். இதுவும் இயலாத நிலையில் ஆண்கள் பஸ்மஸ்நானம் எனப்படும் விபூதி பூசியும், பெண்கள் மஞ்சள் நீர் தெளித்தும், ஆடைமாற்றிக் கொண்டும் பூஜிக்கலாம். இதுபோன்ற சூழலில் உண்மையான பக்தியை ஏற்று சுவாமி அருள் புரிவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us