
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தரம் ஆன பாவங்கள் மேவிய
பந்து அனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
(திருஞானசம்பந்தர் தேவாரம்)
பொருள்: நந்தி என போற்றப்படும் சிவபெருமானின் திருநாமம் 'நமச்சிவாய' என்பதாகும். மந்தர மலையின் உயரத்தையும் விட அதிகமான பாவங்களைக் கூட முற்பிறவியில் செய்திருந்தாலும், சிவனின் திருநாமத்தைச் சொன்னால் தீவினை நீங்கும். செல்வ வளம் பெருகும்.