
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளா ராய்.
(மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பாடல்)
பொருள்: ஆடிப்பூர நன்னாள் எங்களுக்காக வந்துள்ளது. இந்த நாளில், பெருமை மிக்க வைகுண்ட வாழ்வை வேண்டாம் என சொல்லிவிட்டு, பெரியாழ்வாரின் மகளாக ஆண்டாள், பூலோகத்தில் அவதரித்தாள். உலக நன்மைக்காக இந்த தியாகத்தை செய்தாள்.