
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
(வேதாந்த தேசிகனின் கோதாஸ்துதி பாடல்)
பொருள்: ஆண்டாளே! சாஸ்திரம் அனுமதிக்காத செயல்களைச் செய்தும், எங்களுக்கு தங்கள் கணவரான ரங்கநாதர் அருள்புரிகிறார். காரணம் என்னவாக இருக்கும்? நீ சூடிக்கொடுத்த மாலைக்கு அவர் வசப்பட்டது தான். அதோடு இனிய குரலால் தமிழில் பாசுரமும் பாடியிருக்கிறாய். அதனால் உன் பிள்ளைகளாகிய எங்களைத் தண்டிக்காமல் இருக்கிறார். அதற்காக உனக்கு எங்கள் வணக்கத்தை தெரிவிக்கிறோம்.