
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனமகிழ் காலை தோன்றி மனமலர் மலர்த்துவானை
தினந்தொறும் தேவர்கூட்டம் அதனொடு அவுணர் ஈட்டம்
மனந்தொழும் கிரணம் கொண்டான் மாலவன் திகிரி போலும்
தினகரன் சர்வலோக ஈஸ்வரன் தாளே போற்றி
பொருள்: குலதெய்வமான ஸ்ரீமந்நாராயணன் சூரிய தேவன். உலகில் வாழும் மக்களின் மனங்களை மலரச் செய்பவரே!. தேவர்களால் விரும்பப்படுபவரே! அனைவரும் விரும்பும் பொன் போன்ற கதிர்களைக் கொண்டவரே!. பகலவன் என அழைக்கப்படுபவரே! சர்வலோக ஈஸ்வரரே! உம் மலர்ப்பாதங்களைப் போற்றுகிறோம்.