
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈசனார் சாத்தும் எழில் மலரைக் கால்சிதைத்த
வாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனை செய்து
அல்லற் படுசாபந்தீர அருள் சுரந்த
மல்லற் கருணை வளம் போற்றி
பொருள்: இந்திரனின் யானையான ஐராவதம், அழகிய பூஜிக்கத் தகுந்த மலரை மதிக்காமல் காலில் இட்டு சிதைத்தது. அதன் காரணமாக பூலோகத்தில் பிறப்பெடுத்து அலைந்து திரிந்தது. மதுரையில் சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டு தன் சாபம் தீரப் பெற்றது. சாபம் பெற்ற யானையின் துன்பம் போக்கிய பெருங்கருணை மிக்க சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.