
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே ஸக்திபாணே மயூராதிரூட!
புளிந்தாத்மஜா காந்த பக்தார் திஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷா மாம் த்வம்!!
பொருள்: குமாரப் பெருமானே! சிவனின் மகனே! கந்த மூர்த்தியே! சேனாதிபதியே! வேல் தாங்கியவனே! மயில் வாகனத்தில் வருபவனே! வள்ளி கணவனே! பக்தர்களின் மனக்கவலையை அடியோடு போக்குபவனே! பிரபுவே! தாரகாசுரனைக் கொன்றவனே! எப்போதும் என்னை நீயே காத்தருள வேண்டும்.