ADDED : நவ 18, 2016 12:05 PM
அ நிறம் | அளவு
பூங்கழல் தொழுதும் பரவியும்
புண்ணியா புனிதா உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன் என்ன
குறையுடையேன்
ஓங்கு தெங்கிலை யார்கமுகு இளவாழை
மாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே.
பொருள்: தென்னை, பாக்கு, வாழை, மா, மாதுளை, பலா முதலான மரங்கள் கனிகளைச் சிந்தும் திருவாரூரில் வீற்றிருப்பவனே! புண்ணிய மூர்த்தியே! பரிசுத்தமானவனே! பொன்னான உனது திருவடிகளை வழிபடுவதால், என் மனதில் உன்னருள் நீங்காமல் நிறைந்திருக்கும் பேறு பெற்றேன். இதனால் எனக்கு குறையேதும் இல்லை.
குறிப்பு: திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்
