ADDED : ஜன 27, 2017 11:57 AM

அ நிறம் | அளவு
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவமூர்த்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போகுமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.
பொருள்: நல்லவர், கெட்டவர் என்னும் பாகுபாடு இன்றி, அனைவரின் துன்பத்தையும் போக்குபவரே! சிவகதி என்னும் பிறப்பற்ற நிலையைத் தந்தருளும் சிவனே! உயிர் போகும் போது, எம தூதர்களால் துன்பம் நேராமல் காப்பவரே! 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமே எமக்கு உற்ற துணை.
குறிப்பு: சம்பந்தர் தேவாரம்
