தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 03, 2017 09:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2017 09:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கையால் உனைத் தொழச் சென்னியினால் உன் கழல் வணங்க

மெய்யா அடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம்

நையா இயற்கை நல்கி இனி என்னை நழுவ விடேல்

ஐயா உனக்கு அபயம் பழனாபுரி ஆண்டவனே

பொருள்: பழநிமலை முருகப்பெருமானே! கை குவித்து உன்னை வணங்குகிறேன். தலையால் உன் திருவடிகளைச் சரணடைகிறேன். உன் திருப்பெயரையே இடைவிடாமல் ஜபிக்கிறேன். எனது மனம் மகிழும் வகையில் நல்ல நிலையை வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். பழநியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே! உன்னையே அடைக்கலம் அடைந்த என்னை கைவிடாமல் காக்க வேண்டும்.

குறிப்பு: சுப்பிரமணிய கவிராயர் பாடிய பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us