ADDED : பிப் 17, 2017 11:05 AM

அ நிறம் | அளவு
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
பொருள்: நந்தி என்னும் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரம் நமச்சிவாய. அதை பக்தியுடன் ஜெபியுங்கள். அதன் பலனாக மந்தரமலை போல், தீவினைகள் அழுத்தினாலும் அது பறந்தோடி விடும். சிவானந்தம் என்னும் பேரின்பச் செல்வம் உங்களை வந்தடையும்.
குறிப்பு: சம்பந்தர் தேவாரப் பாடல்
