ADDED : மார் 17, 2017 01:47 PM
அ நிறம் | அளவு
எம் தம்பிரானார் எழில் திருமார்வர்க்குச்
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்த உவனாய் நின்றான் தாலேலோ!
தாமரைக் கண்ணனே! தாலேலோ!
(பெரியாழ்வார் பாடல்)
பொருள்: எனது தலைவராக விளங்குபவரே! அழகு மிக்க மகாலட்சுமியை மார்பில் தாங்கியவரே! உம் அழகிய சிவந்த தாமரை போன்ற திருவடிக்கு, இந்திரன் கிண்கிணி என்னும் சதங்கையை அளித்தான். அந்த கிண்கிணி ஒலிக்க உறங்கும் தாமரைக்கண்ணனான உன்னைத் தாலாட்டி மகிழ்கிறோம்.
