ADDED : ஏப் 21, 2017 12:14 PM

அ நிறம் | அளவு
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
(மாணிக்கவாசகர் திருவாசகம்)
பொருள்: மும்மூர்த்திகளாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், மற்ற தெய்வங்களாலும் காண்பதற்கு அரிய சிவபெருமானே! உமது திருவடிகளை
வணங்கினால், உண்மையான இன்பம் பொங்கும்.
