ADDED : ஜூன் 09, 2017 01:52 PM
அ நிறம் | அளவு
வெந்த நீறணி மார்பில் தோல்புனை
அந்தம் இல்லவன் ஆடானை
கந்தமா மலர் தூவிக்கை தொழும்
வலங் கொள்வார் வினை மாயுமே
(ஞானசம்பந்தர் தேவாரம்)
பொருள்: சுட்ட சாம்பலை மார்பில் பூசியவரும், மான் தோல் உடுத்தியவரும், எல்லையில்லா பெருமை பெற்றவரும், திருவாடானை என்னும் திருத்தலத்தில் கோவில் கொண்டவருமான சிவனே! மணம் மிக்க மலர்களால் உம்மை அர்ச்சித்து வலம் வந்தால், முற்பிறவியில் செய்த தீவினை கூட விலகி விடும்.
