ADDED : ஜூன் 23, 2017 09:27 AM

அ நிறம் | அளவு
அலையார் புனல் சூடியாகத் தொருபாகம்
மலையான் மகள்ஒடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.
(திருஞானசம்பந்தர் தேவாரம்)
பொருள்: அலை பாயும் கங்கையைத் தலையில் சூடியவரே! மலையரசன் மகளான பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரே! உலகமே வியக்க திரிபுரம் என்னும் அசுரர்களின் கோட்டைகளை எரித்தவரே! சிற்றம்பலம் என்னும் சிதம்பரத்தில் வாழ்பவரே! உன்னை பணிவுடன் வணங்குபவர்கள் மேன்மக்களாக விளங்குவர்.
