ADDED : ஜூலை 28, 2017 10:14 AM

அ நிறம் | அளவு
செல்வம் எட்டும் எய்தி
நின்னால் செம்மையேறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை
உலகில் இல்லையாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் காட்டி
மோக வதை நீக்கி
எல்லையற்ற சுவையே
எனை நீ என்றும் வாழ வைப்பாய்.
(பாரதியாரின் லட்சுமி பாட்டு)
பொருள்: லட்சுமித்தாயே! உன்னருளால் அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழும் பாக்கியம் பெறுவேன். இல்லை எனச் சொல்லும் கொடுமை இவ்வுலகில் இல்லாமல் செய்வேன். எல்லையற்ற பேரின்பமே! நல்வாழ்வு தருபவளே! முல்லை மலர் போன்ற சிரிப்பால் மோகம் என்னும் ஆசையில் இருந்து காப்பாயாக.
