ADDED : ஆக 04, 2017 12:26 PM

அ நிறம் | அளவு
குயிலாய் இருக்கும் கடம்பாடவி யிடைக்கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.
(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி பாடல்)
பொருள்: கடம்பவனம் என்னும் மதுரையில் வாழும் குயில் போன்ற மீனாட்சியே! பனிமலையான இமயத்தில் அருள்புரியும் மயிலே! ஆகாயத்தில் விளங்கும் ஞானச்சுடரே! தாமரையே! அழகு அன்னமே! கைலாயநாதரான சிவனுக்கு மலையரசனால் மணம் செய்யப்பட்ட அழகு ஆபரணமே! உன்னை வணங்குகிறேன்
