sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : செப் 24, 2010 12:34 PM

Google News

ADDED : செப் 24, 2010 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்- நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகா என்று ஓதுவார் முன்.

பொருள்: முருகா என்று ஆறுமுகப்பெருமானின் திருநாமத்தை ஓதிக்கொண்டிருந்தால், மனதில் ஏற்படும் அச்சத்தை போக்க ஆறுமுகன் ஓடிவருவான்.  மனதில்  தோன்றும் தேவையற்ற எண்ணங்களை அழிக்க வேலாயுதத்தோடு நம் முன் வந்து நிற்பான். மனதில் ஒருமுறை முருகப்பெருமானை நினைத்தால் போதும், ஒருமுறைக்கு இருமுறையாக வந்து நற்பலன் தருவான்.

* இந்த வார ஸ்லோகம்

ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்

ரூபேணாப்திமம் புதம்

ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்

தம் புதம் ப்ரணமாம் யஹம்

பொருள்

பிறைச் சந்திரனின் திருக்குமாரனே! தினை மொட்டைப் போன்ற கருநிறமானவனே! பிரகாசம் பொருந்தியவனே! உயர்ந்த குணங்களைக் கொண்டவனே! ஈடற்ற சிறப்புகளைப் பெற்ற புதபகவானே உன்னை வணங்குகின்றேன்.

(கல்வியில் சிறந்து விளங்க இந்த துதியைப் படியுங்கள்)

* சொல்லுங்க தெரிஞ்சுக்கறோம்

* நக்கீரர் முக்தி பெற்ற சிவத்தலம்.....

காளஹஸ்தி

* பிரபந்தங்களில் முதல் திருவந்தாதியைப் பாடியவர்...

பொய்கையாழ்வார்

*  சிவ அடியார்களை 60 பேராகத் தொகுத்தவர்.....

சுந்தரர்

*  மனிதமுக விநாயகர் எங்கிருக்கிறார்?

செதலபதி

*  ராமர் ஜடாயுவிற்கு பிதுர்கடன் ஆற்றிய தலம்...

புள்ளம்பூதங்குடி(கும்பகோணம் அருகில் உள்ளதலம்)

* ராவணனின் மனைவி....

மண்டோதரி

* முருகன் அருளால் வெட்டுப்பட்ட கை வளரப் பெற்றவர்....

முருகம்மையார்

*  சுக்ரீவனின் அண்ணன் வாலி சிவபூஜை செய்த தலம்....

கபிஸ்தலம் (தஞ்சாவூர் மாவட்டம்)

*  சுந்தரரின் பெற்றோர் யார்?

சடையனார், இசைஞானியார்

*  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய பல்லவ மன்னன்....

மகேந்திரவர்மன்






      Dinamalar
      Follow us