ADDED : ஜன 29, 2018 09:18 AM

அ நிறம் | அளவு
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.
(அருணகிரிநாதர் பாடிய பாடல்)
பொருள்: வள்ளி மணாளனே! மயிலில் பவனி வரும் மாணிக்கமே! கோடிக்கணக்கில் முத்துக்கள் விளையும் கடல் சூழ்ந்த திருச்செந்துாரில் வீற்றிருப்பவனே! எரிகின்ற கொள்ளியில்,சிக்கிய எறும்பு போல பிறவி துன்பத்தால் மனம் வருந்துகிறேன். என் கவலையைப் போக்கியருள வேண்டும்.
