
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆராவமுதாய்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு
செல்வாய் மதில் தில்லைக் கருளித் தேவன் ஆடுமே.
(திருமாளிகைத்தேவரின் திருவிசைப்பா பாடல்)
பொருள்: இருள், ஒளியாய் இருப்பவரே! அருவமும், உருவமும் கொண்டவரே! திகட்டாத அமுதே! கல்லால மர நிழலில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்தவரே! கயிலை மலையானே! ஆயிரமாயிரம் அடியவர்களால் கரம் குவித்து வணங்க அருள்புரிபவரே! செல்வரே! திருமதில் சூழ்ந்த தில்லையில் திருநடனம் புரியும் சிவனே! அருள்புரிவாயாக.

