நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலினால் நறுநெய்யால் பழத்தினுற் பயின்றாட்டி
நுாலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினால் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.
பொருள்: பால், நெய், பழம் என பலவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்தும், மணம் கமழும் நறுமலர்கள் சூடப்பட்டும் வணங்கப்படுபவரே! நீந்தி விளையாடும் மீன் வளம் மிக்க வயல்கள் நிறைந்த திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருப்பவரே! காலினால் எமனை உதைத்த பெருமை மிக்க கணபதீச்சரத்தானே! உம்மை போற்றுகின்றோம்.

