நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரமன் மால் அறியாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரமனார் உறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழு மட நெஞ்சமே!
(திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்)
பொருள்: அறியாமையில் வாழும் மனமே! பிரம்மனும், திருமாலும் அறிய முடியாத பெருமைமிக்கவன் சிவன். தருமமே வடிவான அவன், அரிய தத்துவமாகத் திகழ்கின்றான். பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அப்பெருமானை வழிபடுவதை உன் கடமையாகக் கொள்வாயாக.

