
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடும் பரிவேல் அணிசேவல் என
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமாமுகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே
பொருள்: நடனமாடும் மயில் மீது வலம் வரும் முருகனே! அழகான சேவல் கொண்டவனே! உன்னைப் பாடிப் புகழும் பணியை அருள்புரிவாயாக. போர்க்களத்தில் கஜமுகாசுரனைத் தேடிச் சென்று அழிக்கும் விநாயகப்பெருமானின் தம்பியே! உன்னைச் சரணடைகிறேன்.

