நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகா என உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவர் வியாதி
அடைந்து நையார்
ஒருகாலமும் துன்பம் எய்தார் பரகதி உற்றிடுவார்
பொருகாலன் நாடு புகார் சமராபுரிப் புண்ணியனே''
பொருள்: சூரனுடன் போர் புரிந்த புண்ணிய தெய்வமான கந்தப்பெருமானை 'முருகா' என்று சொல்லி வணங்குபவர்களுக்கு, பிறவிப்பிணி வராது. வாழும் காலத்தில் எந்த வித நோயும் வராது. எந்தக்காலத்திலும் துன்பம் வராது. எமனுடைய உலகமான நரகத்துக்குச் செல்லமாட்டார்கள்.
குறிப்பு: ஒருமுறை சென்னை வந்த மைசூர் மகாராஜா, கிருபானந்தவாரியாரை அழைத்து, ''முருகனை வணங்கினால் என்ன வரும்?'' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வாரியார், ''என்ன வரும் என்பதை விட என்ன வராது?'' என்று சொல்கிறேன்'' எனச் சொல்லி, மேற்கண்ட பாடலைப் பாடிக்காட்டினார். சுவையான பாடல் தானே!