நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை வாழ்கின்ற தேவாதி தேவா சரணம்
தாள் பணிந்தோரைக் காத்தருளும் ஐயனே சரணம்
பதினெட்டுப் படி மீதமர்ந்த தேவனே சரணம்
அகிலாண்ட கோடி நாயகனே அருள் புரிவாய் சரணம்!
பொருள்: சபரிமலையில் வாழ்கின்ற
இறைவனே! திருவடியைப் பணிந்தவர்களைப் பாதுகாப்பவரே! பதினெட்டு படிகளின் மீதமர்ந்து தரிசனம் தருபவரே! உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் ஐயப்பனே! உன்னைச் சரணடைந்த எங்களைக் காத்தருள வேண்டும்.