
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இதமுற வா இன்னருள் புரிவாய்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய் பண்ணொளியான
உதவியே அருளும் உத்தமா போற்றி
பொருள்: புதன் பகவானே! உனது பொற்பாதங்களை வணங்குகிறேன். நிம்மதியாக வாழ நல்லருள் புரிவாயாக. நல்வாழ்வினைத் தருவீராக. அனைவருக்கும் உதவி செய்யும் உத்தமனே! உம்மைப் போற்றுகிறேன்.

