
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவளே
கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
(சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்)
பொருள்: காளை வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானே! என் உள்ளத்தில் ஒளிவிடும் செஞ்சுடரே! வண்டுகள் மொய்க்கும் பூக்கள் சூடிய உமையவளை இடப்பாகத்தில் கொண்டவரே! காண்பவர் விரும்பும் அழகரே! சிவகணங்களின் தலைவரே! காளத்திநாதரே! பெரியவரே! உன்னை அல்லால் வேறொரு தெய்வத்தை நான் வணங்க மாட்டேன்.

