
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றாக நாளையே ஆக இனிச் சிறிது
நின்றாக நின் அருள் என்பாலதே; - நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னை அன்றி இலை.
(திருமழிசையாழ்வார் பாடிய பாசுரம்)
பொருள்: நாராயணனே! இன்றோ, நாளையோ, இன்னும் சில காலம் கழித்தோ என்றைக்காவது ஒருநாள் உன்னுடைய அருள் எனக்கு கிடைக்கும். நிச்சயமாக உன்னையன்றி அடைக்கலம் எனக்கு வேறில்லை. அதே போல என்னை விட்டால் வேறு காப்பாற்றப்பட வேண்டிய பொருள் உனக்கும் இல்லை.

