
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெடுவாய் மனனே கதி கேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை துாள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
விளக்கம்: அழிந்து போகும் மனமே! முக்தி பெறும் வழி சொல்கிறேன் கேட்பாயாக! உள்ளதை மறைக்காமல் பிறருக்கு தானம் அளிப்பாயாக. கூரிய வேல் தாங்கிய முருகப்பெருமானின் திருவடிகளை நினைத்து தியானம் புரிவாயாக! நீண்ட காலமாகத் தொடர்ந்திடும் பிறவி என்னும் வேதனையைப் போக்கி, அதன் மூலகாரணமான பற்றினைச் சுட்டெரிப்பாயாக!