ADDED : ஜூன் 27, 2019 10:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஐந்து முகம் கொண்ட விநாயகரை எப்படி அழைப்பர்
ஹேரம்ப கணபதி
2. ஷீரடி பாபாவிற்கு விருப்பமான மலர்.........
மஞ்சள் நிற சாமந்திப்பூ
3. கந்தர் கலி வெண்பாவை பாடிய அருளாளர்.........
குமர குருபரர்
4. பகவத் கீதை என்பதன் பொருள்..........
கடவுளின் பாடல்கள்
5. வியாசர் விருந்து என்னும் பெயரில் மகாபாரதம் எழுதியவர்.......
ராஜாஜி
6. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் செய்த தர்மங்கள் எத்தனை?
32
7. அபிராமிபட்டருக்கு பெற்றோர் இட்ட பெயர்...........
சுப்பிரமணியம்
8. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம்..........
தட்சிணாயனம்
9. ஏழுமுறை எதிரொலிக்கும் பிரகாரம் உள்ள கோயில்...........
திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயில்
10. நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாடிய தலம்..........
திருப்பரங்குன்றம்