
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
(திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)
பொருள்: சிறந்த பெண்மணியான பார்வதியுடன் சீர்காழியில் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். கண்ணிற்கு இனியதும், வளம் மிக்கதுமான இத்தலத்தில் வழிபடுவோருக்கு பூமியில் நலமுடன் வாழும் பாக்கியம் கிடைக்கும். குறையேதும் உண்டாகாது. முக்தி இன்பம் கிடைக்கும்.