
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(திருப்பாணாழ்வார் பாடிய பாசுரம்)
பொருள்: முற்பிறவிகளில் செய்த வினைகளின் பாரத்தை போக்கி, என்னை குத்தகைக்கு எடுத்துக் கொண்டான். அதுமட்டுமின்றி என்னுள் புகுந்து விட்டான். நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. அரங்கத்து அம்மானின் மாலை சூடியிருக்கும் திருமார்பு என்னை ஆட்கொண்டு விட்டதே!