
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கடமாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
(நம்மாழ்வார் பாடிய பாசுரம்)
பொருள்: கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே! மூவுலகங்களையும் திருவடியால் அளந்தவனே! பரம்பொருளான திருமாலே! திருவேங்கட மலையில் குடியிருப்பவரே! உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.