
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமகளானாய் கலைமகளானாய் மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய் பெருவலி யானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய் நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
(துர்கா ரோக நிவாரண அஷ்டகம்)
பொருள்: லட்சுமி, சரஸ்வதி, பார்வதி மூவருமாகத் திகழும் துர்கா தேவியே! செல்வம், அறிவு, வலிமை மூன்றும் கொண்ட பெண்ணரசியும் நீயே. மணம் மிக்க மலர் போன்ற இளமை மிக்கவளே! நன்மை அருள்பவளே! கேட்டதை தரும் நந்தினி பசுவே! நோய், துன்பம், ஏக்கத்தைப் போக்கி அருள்பவளே! துர்கா தேவியே! உன்னை வணங்குகிறேன்.