ADDED : செப் 27, 2019 10:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1.பாலை நிலத்திற்கு உரிய தெய்வம்...........
கொற்றவை
2. முருகனின் தாய் என்னும் பொருளில் உள்ள துர்கையின் பெயர்....
ஸ்கந்த மாதா
3. திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர்.........
ஆதிசங்கரர்
4. காளி, மாரியம்மனை ............. உறவாக குறிப்பிடுவர்.
சகோதரி
5. அம்பிகையின் திருநாமமான சாகம்பரி என்பதன் பொருள்..........
தாவரங்களைக் காப்பவள்
6. கங்கையில் பார்வதியின் காதணி விழுந்த இடம்..........
மணிகர்ணிகா கட்டம்
7. காளிதாசர் முதன் முதலில் இயற்றிய தேவி ஸ்தோத்திரம்.........
சியாமளா தண்டகம்
8. கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம் .........
கண்ணகி
9. மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர்......
தடாதகை பிராட்டியார்
10. வடக்கு நோக்கி இருப்பதால் காளியை........என அழைப்பர்.
வடக்குவாசல் செல்வி