
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
பொருள்: முருகப்பெருமானே! நீ ஏறி விளையாடும் மயில், கையில் ஏந்தியுள்ள வேல், அழகு நிறைந்த சேவல் என உன் பெருமைகளைப் பாடும் பணியை எனக்கு அருள்வாயாக. போர்க்களத்தில் அசுரனான கஜமுகனைத் தேடிச் சென்று வதம் செய்யும் ஆனைமுகத்தானின் சகோதரனே! உன்னை வணங்குகிறேன்.