
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
பொருள்
முருகப்பெருமானே! உன்னுடைய மென்மையான மலர் போன்ற திருவடிகள் என் விழிகளுக்குத் துணையாகும். மொழிக்குத் துணையாக இருப்பது 'முருகா' என்னும் உனது திருநாமம். முற்பிறவியில் செய்த பழி பாவங்களை உன் பன்னிரண்டு தோள்கள் போக்கி விடும். பிறவி முடிந்தபின் தனிவழியில் எனதுயிர் செல்லும்போது திருச்செங்கோடு வேலவனாகிய உன் மயிலும், வடிவேலும் துணையாக வர வேண்டும்.