
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருமறை முதல்வனை ஆழிமாயனைக்
கருமுகில் வண்ணனை கமலக் கண்ணனைத்
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்
அரிய வேதங்களால் போற்றப்படும் முதல்வனே! கடலில் துயில்பவனே! மாயையில் வல்லவனே! மேக நிறத்தவனே! தாமரை போல சிவந்த கண்களைக் கொண்டவனே! மகாலட்சுமியின் மணாளனே! தேவர்களின் தலைவனே! உன் தாமரைப் பாதங்களைச் சரணடைகிறோம்.