
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தை
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.
பொருள்: கையில் மானையும், இடது பாகத்தில் உமையவளையும் ஏற்றிருப்பவனே! தாமரை மலர் போன்ற உனது திருவடிகளை கை குவித்தும், நாவில் தழும்பேறும் வகையில் அதிகமாகவும் நமச்சிவாய பதிகத்தை பாடி வழிபடுவோருக்கு துன்பம் நீங்கும்.

