
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விண்கொள் அமரர்கள் வேதனை தீரமுன்
மண்கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து
திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே! கனவளையீர் காணீரே!
பொருள்: வளையல் அணிந்த பெண்களே! விண்ணில் வாழும் தேவர்களின் துன்பத்தைப் போக்குவதற்காக, இந்த மண்ணிற்கு திருமால், வசுதேவரின் மகன் கண்ணனாக வந்திருக்கிறார். வலிமை மிக்க அசுரர்களை அடக்க வளர்ந்து கொண்டிருக்கிறார். அந்த கண்ணனின் அழகைக் கண்டு மகிழுங்கள்.