ADDED : நவ 19, 2013 12:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. தர்மருக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தை உபதேசித்தவர்....
பீஷ்மர்
2. பகவத்கீதையின் பிற பெயர்கள்......
ஹரிகீதை, வியாசகீதை
3. நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்.......
11
4. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்...
திருத்தொண்டர் புராணம்
5. விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்........
குமாரசஷ்டி விரதம் (பிள்ளையார் நோன்பு)
6. ஆலயம் என்பதன் பொருள்....
ஆன்மா லயிக்கும் இடம்(உயிர் இறைவனைச் சேருமிடம்)
7. அரியர்த்தர் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
சங்கரநாராயணர்
8. யதிராஜர்(துறவிகளின் அரசர்) என அழைக்கப்படுபவர்......
ராமானுஜர்
9. யதிராஜ வைபவம் என்னும் நூலை எழுதியவர்......
வடுக நம்பி
10. ஏழுமலையானின் ஆராதனை மணியின் அம்சமாகப் பிறந்தவர்........
வேதாந்த தேசிகன்