நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்தஊர்
துள்ளி வாளை பாய்வயல் கரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல் நாரை ஆரல்வாரும் அந்தணாரூர் என்பதே.
பொருள்: கள்ளம் மிக்க உள்ளத்தில் உண்டாகும் வஞ்சக எண்ணத்தை அகற்றிவிட்டு, பக்தியுடன் மனம் ஒன்றி வழிபடுபவர்களின் மனதில் மட்டுமே வீற்றிருப்பவன் சிவன். அப்பெருமான், வாளை மீன் துள்ளிப் பாயும் வயல்கள், வண்டுகள் மொய்க்கும் அல்லிப்பூக்களும், ஆரல் மீனை வாரி உண்ணும் நாரைகளும் நிறைந்த குளத்தையுடைய திருவாரூரில் விருப்பத்தோடு குடியிருக்கிறான்.