
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.
பொருள்: வண்டே! நமது சிவனை நினைத்தாலும், பார்த்தாலும், சொன்னாலும் எலும்பு கூட உருகும்படி பேரின்பமாகிய தேனைத் தருவான். தினை அளவு சிறிதாக இருக்கும் பூவிலிருக்கும், தேனை உண்ணாமல், கூத்தனான சிவனிடம் சென்று இந்த தகவலை உன் ரீங்கார மொழியால் சொல்வாயாக.
விளக்கம்: உலகத்தில் கிடைக்கும் இன்பங்கள், தினையளவே உள்ள பூவுக்குச் சமமானவை. அந்த இன்பங்களில் மூழ்கிக்கிடக்கும் <மக்கள், பேரின்பமான இறைவனை மறந்து போனார்கள். அவனது திருப்புகழை சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனது திருவடி நிழலும், பிறப்பற்ற பேரின்பமும் கிடைத்து விடும்.