ADDED : ஜன 28, 2014 01:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1.'திரு' என்னும் அடைமொழி கொண்ட நட்சத்திரங்கள்....
திருவாதிரை, திருவோணம்
2. உண்ணும் சோறைக் கூட கண்ணனாகக் கண்டவர்...
நம்மாழ்வார்
3. 'அழுதால் உனைப் பெறலாமே' என பக்தியில் ஆழ்ந்தவர்.....
மாணிக்கவாசகர்
4. வீட்டில் பூஜிக்கும் சுவாமி சிலை ......... உயரம் இருப்பது நல்லது.
ஒரு ஜாண் (இந்தத் தகவலைச் சொல்பவர் கமலாத்மானந்தர்)
5. சிவன் தனது சிரசில் எதை சூடியிருப்பார்?
பிறை நிலா
6. காரைக்காலம்மையார் சிவன் மீது பாடிய நூல்.....
அற்புதத் திருவந்தாதி
7. வைகுண்டத்தில் காவல்புரியும் துவாரபாலகர்கள்.....
ஜெயன், விஜயன்
8. பாகவதத்தில் சிறப்பாக கருதப்படும் பகுதி.......
பத்தாம் பாகமான கிருஷ்ணரின் பிறப்பு
9. கடவுளை முழுமையாகச் சரணடைவதை ......... என்பர்
பிரபத்தி
10. சுகரிடம் பாகவதம் கேட்ட மன்னன்......
பரீட்சித்து