
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்வினை யொன்று அறியாதேன் திருவடியே சரண் என்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ
பையரவா இங்கு இருந்தாயோ என்னப் பரிந்து என்னை
உய்ய அருள் செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே.
பொருள்: நான் செய்யும் செயல் என்ன என்று எனக்கே தெரியாமல் செய்து கொண்டிருந்தேன். உன் திருவடியே அடைக்கலம் என்று பொய்யாகக் கூறித் திரிந்தேன். பாம்பினை சூடிய சிவபெருமானே! என் தவறுகளை மன்னித்து, வலிய வந்து எனக்கு அருள்புரிய மாட்டாயா? என்னை 'எங்காவது போ' என்று சொன்னால் நான் யாரிடம் போவேன்?