
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணார் திங்கள் பொங்கு அரவம் தாழ்புனல் சூடிப்
பெண் ஆண் ஆயபேர் அருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழு வோர்கட்கு இடர்பாவம்
நண்ணா ஆகும் நல்லினை யாய நல்குமே.
பொருள்: குளிர்ந்த நிலவு, பாம்பு, பெருகியோடும் கங்கை ஆகியவற்றை சூடிய சிவனே! அம்மையப்பராக விளங்கும் அருளாளனே! கை கூப்பி வணங்குவோரின் பாவத்தை போக்கி நன்மையை அருள்பவனே! கண்ணார்கோயில் என்னும் குறுமாணக்குடியில் வீற்றிருப்பவனே! அருள்புரிவாயாக.
குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கண்ணார்கோயில் உள்ளது.