
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருள்: மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் தலை தாழ்த்தி வணங்கும் சிவந்த பாதம் கொண்டவளே! கொன்றை மலர் சூடிய சடையில் குளிர்ந்த நிலவு, பாம்பு, கங்கை ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் புனிதராகிய சிவபெருமானும், நீயும் எந்தநாளும் என் சிந்தையில் குடியிருக்க வேண்டும்.